Can't find? Search Here:

Saturday, 26 October 2013

சூர்யா கழட்டி விட்டார்; அஜித் கை கொடுத்தார் : நிம்மதி பெருமூச்சு விட்ட கெளதம்மேனன்! | Ajith Going to Do a Film with Gowtham Menon

சூர்யாவை பிரிந்த டைரக்டர் கெளதம்மேனன் அடுத்து அஜித்துடன் ஒரு புதிய படத்தில் கை கோர்த்திருக்கிறார்.

‘இப்படியெல்லாம் நடக்கும்ணு நான் என்ன கனவா கண்டேன்’ என்ற நிலை தான் நேற்று வரை கெளதம்மேனனுக்கு இருந்தது. ‘நீ தானே என் பொன் வசந்தம்’ என்ற ஒரு மெகா பட்ஜெட் தோல்வியைக் கொடுத்து விட்டு அவர் பட்டபாடு இந்த உலகம் அறிந்தது தான்.

அடுத்து சூர்யாவுடன் ஒரு படத்தில் இணையலாம் என்று போனால் அவரும் ‘கதையே ரெடி பண்ணாம வந்து நிக்குறாரு…’ என்று மீடியாக்களுக்கு பிரஸ்ரிலீஸ் அனுப்பி பிரிவை சொல்லுகிற அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. பழகின தோஷத்துக்கு அவரும் 5 கோடி ரூபாயை கையில் கொடுத்து விட்டு நேக்காக கழட்டி விட்டு விட்டார்.

ஆயிரம் பேர் கை விட்டாலும், கை கொடுக்க ஒருவராவது இருக்க மாட்டார்களா என்ன? அந்த ஒருவராகத் தான் இப்போது மாறியிருக்கிறார் நடிகர் அஜித்.

ஏற்கனவே தொடர் தோல்விப்படங்களை கொடுத்து நொடிந்து போயிருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு அவரது தயாரிப்பில் ஹிட் படங்களில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ஹீரோக்களே படம் நடித்துக் கொடுக்க முன்வராத நிலையில், இதுவரை அவரது தயாரிப்பில் ஒரு படம் கூட நடிக்காத அஜித் தானாக முன் வந்து ஆரம்பம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்.

 
 
இப்போது கிட்டத்தட்ட அதே நிலைமையில் இருக்கு டைரக்டர் கெளதம்மேனனுக்கும் கை கொடுக்க முன் வந்திருக்கிறார் அஜித். ஆமாம், கெளதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். இதற்காக முறையான அறிவிப்பை இன்று அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஆரம்பம்’ படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து ‘வீரம்’ படத்தில் நடிக்கப் போனார் அஜீத். இப்போது அந்தப்படத்தின் ஷுட்டிங்கும் முடிய உள்ள நிலையில், அடுத்த படத்தை கெளதம்மேனனுக்கு கொடுத்திருக்கிறார் அஜித்.

கெளதம்மேனனும் அஜீத்தும் 3 வருஷத்துக்கு முன்பே ஒரு படத்தில் சேர முடிவெடுத்திருந்தனர். ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்த நிலையில் இப்போது மீண்டும் அவர்கள் இந்த புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

‘ஆரம்பம்’ படத்தைத் தயாரித்தாலும், இன்னும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் கடன்கள் முழுமையாக அடைவில்லையாம். அந்த சிரமப்படுவதை கண்கூடாக நேரில் பார்த்த அஜித் அவருக்கே மீண்டும் ஒரு படத்தில் நடித்து கொடுக்க முன் வந்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

‘மனசு’ எல்லாருக்கும் இருக்கும், ஆனா ‘நல்ல மனசு’ சில பேருக்குத்தான் இருக்கும். அது அஜித்துக்கு இருக்கு.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

x

Get Our Latest Posts Via Email - It's Free

Enter your email address:

Delivered by FeedBurner